Saturday, December 5, 2009

நியூமராலாஜி படுத்தும் பாடு!

ஜோசியம், கைரேகை, கிளி ஜோசியம், குறி சொல்றது, ராசி கல்லு, வாஸ்த்து, நியூமராலாஜி.... இப்படி நிறைய விஷயங்கள் நம்மை சுத்தி சுத்தி வந்து இம்சை பண்ணிக்கிட்டு இருக்கிறது தெரிஞ்ச விஷயம்...

நமக்கு நாமே ஏதாவது பண்ணிகிட்டாலோ, கிறுக்குத்தனமா எதையாவது பண்ணி தொலைச்சு ஏதாவது பிரச்சனை வந்தாலோ.... குரு சரியா இல்லையா...சனி சாஞ்சு உக்காந்திருக்கான்னு ஒரு தடவை தேடிப்பாத்து சமாதானம் பண்ணிக்கறதுன்னு ஆயி போச்சு!


கட்டத்தை போட்டு கபடி ஆடிப்பத்துட்டு, ஜோசியக்காரங்க சொல்ற பரிகாரத்தை பண்ணிபுட்டு, நல்லது நடக்குதான்னு தேவுடு காத்து வீணா போறது வழக்கமான நடைமுறை தான்...

இப்படி மனுஷங்க செஞ்சிகிட்டு இருக்கிற பரிகாரம் இப்போ அடுத்த ஸ்டேஜுக்கு புரோமோட் ஆயிருச்சு!

சிவகாசி (அதாங்க குட்டி ஜப்பான்னு!) ஊரு நிறைய பிரச்சனை கொடுக்குதாம்... அப்போ அப்போ வெடி விபத்து வேற நடந்து உயிரை வாங்குதாம்... ரோடு சரியில்லை, தண்ணி வரலைன்னு மக்கள் வேற அடிக்கொருதரம் போராட்டம் ஆர்ப்பாட்டம்னு அதகளம் பண்றாங்களாம்...

இதை எல்லாம் எப்படி சமாளிக்கிறது???

விவரம் தெரியாத ஆளுங்க தான்.... வெடி விபத்தை தவிர்க்க பாதுகாப்பு ஏற்பாடுகளை பண்றது... ரோட்டை ரிப்பேர் பண்றது..... தண்ணி சப்பிலையை ஒழுங்கு படுத்தறதுன்னு என்னத்தையாவது பண்ணி தொலைப்பாங்க!

ஆனா, சிவகாசி நகராட்சி துணை தலைவர் அசோகன் ரொம்ப விவரமானவரு!

இந்த எல்லா பிரச்சனைக்கும் காரணம்... ஊரு பேருதான்னு சொல்லி, ஒரு நியூமராலஜிச்ட்டை பாத்து, அவர் சொன்ன பரிகாரப்படி, ஊரு பேரை SIVAKAASI ன்னு ஒரு A கூட போட்டு அசத்திட்டாரு இல்லே??

அவரு கொண்டு வந்த தீர்மானத்தை ஒட்டுமொத்தமா எந்த எதிர்ப்பும் இல்லாம அத்தனை உறுப்பினர்களும் ஒருமனதா (இதுலே மட்டும்!) ஆதரிச்சு நிறைவேத்தி இருக்காங்க!

இனி அந்த ஊரு நகராட்சி எதுவுமே பண்ணாமலேயே அமோகமா ஆயிடும்... பின்னே.. பேரை மாத்தியாச்சு இல்லை???

திராவிட "பேரியக்கத்தின்" ஆட்சி வேறே!

No comments:

Post a Comment

Printfriendly