Sunday, December 13, 2009

தமிழகம் - பிரிவினை கோரிக்கை!


தமிழகத்தின் வட மாவட்டங்களில் மட்டும் வன்னியர்கள் மிகுதியாக இருக்கும் வட்டங்களில் செல்வாக்கான ஒரு கட்சி பாட்டாளி மக்கள் கட்சி!

வன்னியர்களுக்கான அங்கீகாரம், இட ஒதுக்கீட்டுக்கான போராட்டம் போன்றவற்றால் சாதி இயக்கமாக அறியப்பட்ட வன்னியர் சங்கம், பின்னாளில் பொது அரசியலில் சங்கமிக்கும் விதமாக, பாட்டாளி மக்கள் கட்சி (பா.ம.க) என்று அரசியல் இயக்கமாக மறு அவதாரம் எடுத்தது!

ஒவ்வொரு முறையும் வெற்றி வாய்ப்புள்ள அரசியல் அணிகளை தீர்மானிப்பதில் ஓரளவு தேர்ச்சி பெற்ற ராமதாஸ், அந்த அணியுடன் அணி சேர்ந்து படிப்படியாக வளர்ந்து, மத்திய அமைச்சரவையின் கேபினெட் அமைச்சர் பொறுப்பு வாங்கும் அளவுக்கு பா.ம.கவை வளர்த்தார்!

எனினும், பாமகவின் வீச்சு என்பது, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், வேலூர், அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களை தாண்டி போகவில்லை... சேலம் மாவட்டம் மேட்டூர் ஓமலூர் போன்ற பகுதிகளில் கணிசமான செல்வாக்கு கிடைத்து இருக்கிறது பாமகவுக்கு... ஜி.கே.மணி புண்ணியத்தில்!

பத்து ஆண்டுகளுக்கு முன்பு, தமிழகத்தை இரண்டாக பிரிக்கவேண்டும் என்கிற ஒரு கோரிக்கையை முன்மொழிந்து பரபரப்புக்கு வித்திட்டார்!  காவிரியை எல்லையாக கொண்டு, வடக்கு தெற்கு என்று தமிழகத்தை பிரிப்பது தான் தமிழகத்தின் நிர்வாக வசதிகளுக்கு நல்லது என்று அப்போது அவர் தெரிவித்தார்!

அந்த கருத்தை அரசியல் ரீதியாகவே இதுவரை அணுகி, பாமக முதல்வர் நாற்காலியில் அமர வேண்டும் என்றால், ஒட்டுமொத்த தமிழகத்தில் போட்டி இட்டு வெற்றி பெறுவது கடினம் என்பதாலேயே இது போன்ற மாநில பிரிவினையை கேட்கிறார் என்று விமரிசனம் செய்தவர்கள் அநேகம் பேர்!

இன்றைய தினத்தந்தி இதழுக்கு நேர்காணல் அளித்தபோது கீழ்க்கண்டபடி சொல்லி இருக்கிறார்!

"மாநிலங்களை பிரிப்பதால் நல்ல பயன் எப்படம், சிறு சிறு மாநிலங்கள் அமைவது நல்லது!   மதுரையை தலைநகராக கொண்டு தமிழகத்தை இரண்டாக பிரிக்கவேண்டும் என்று பத்து ஆண்டுகளுக்கு முன்பு நான் சொன்னபோது பலத்த எதிர்ப்பு வந்தது! இப்போது அதை நான் சொன்னால் எதிர்ப்பே இருக்காது! இதற்கான காரணம் உங்களுக்கு தெரியும்! அதை நான் சொல்ல விரும்பவில்லை!"

மாநிலத்தை இரண்டாக பிரிப்பது என்கிற கோரிக்கை எழுந்து எப்போதோ அடங்கி விட்டது... அதேபோல, நிர்வாக வசதி கருதி தலைநகரை மாற்றும் எண்ணமும் இப்போது அடங்கி விட்டது....

முன்பு எம்.ஜி.ஆர் காலத்தில் தலைநகரை திருச்சிக்கு மாற்ற முடிவு செய்தார்... காரணம் குமரி மாவட்டத்தில் இருந்து அரசு அலுவலாக ஒருவர் தலைநகர் வந்து செல்வது அதிக நேரம் பிடிக்கிறது என்பதால், திருச்சி தமிழகத்தின் எந்த மூலையில் இருந்தும் சுமார் ஆறு மணி நேரத்தில் அடையக்கூடிய இடத்தில் இருப்பதால், அரசு நிர்வாகத்தை திருச்சிக்கு மாற்றுவது எல்லோருக்கும் பயன் அளிக்கும் என்று எம்.ஜி.ஆர் கருதினார்.
ஏனோ, அந்த திட்டம் ஆரம்ப ஆய்விலேயே ஒதுக்கப்பட்டு விட்டது!

இன்றைய தேதிக்கு தமிழகம் ஒரே மாநிலமாக இருப்பதா, இரண்டாக பிரிப்பதா என்கிற கேள்வி எழவில்லை... ஒருவேளை எழுமானால்???

பாமகவின் என்னப்படியான அரசியல் ரீதியான பலாபலன்களை மாத்திரம் மனதில் வைத்து மாநில பிரிவினை என்பது கூடாது என்பது எனது கருத்து...

ஏனெனில் ராமதாஸ் சுட்டி காட்டும் பகுதிகள் வடக்கு தமிழகத்தில் அமையுமானால் அது மிகுந்த வறட்சியான, வளம் குன்றிய, நீராதாரம் எதுவும் இல்லாத, ஆனால் தொழில்மயமாக்கப்பட்ட மாநிலமாக அமையும்...

இன்னொருபுறம் மதுரையை தலைநகராக கொண்ட மாநிலம், விவசாய வளம், நீர்வளம், தொழில்வளம், கல்வி வளம் என்று எல்லா வளங்களும் பெற்ற ஒரு செழிப்பான மாநிலமாக அமையும்..

தமிழகத்தின் ஜீவாதார நதியான காவிரி எல்லையாக வைப்பது இரு பிரிவிற்கும் பாதகமான  விளைவுகளையே ஏற்படுத்தும்!  வடக்கு தமிழகத்தில் இருக்கும் பாலாறு, தென்பெண்ணை, பொன்னை, போன்ற நதிகள் வறண்டு பாலையாகி  காலங்கள் அதிகம் ஆகிவிட்டது...  வைகை, குடமுருட்டி, தாமிரபரணி, குரங்கனாறு, சோலையாறு, அமராவதி, ஆழியாறு, போன்ற பல பல தென் தமிழக நதிகளுக்கு கேரளாவில் இருந்து தொடர்ச்சியான நீர்வரத்து இருப்பதால் அவை நல்ல செழியாப்பாக இருக்கிறது...

விவசாயம் மட்டுமே தமிழகத்தின் மூல தொழிலாக இருப்பதால் வடக்கு தமிழகம் போதிய வளர்ச்சி காண்பதும் அரிது!

எனவே, தமிழகத்தை நிர்வாக வசதியை காரணம் காட்டியோ, அரசியல் அரியாசனத்தை காரணம் காட்டியோ கூறு போடுவது எதிர்மறை விளைவுகளை தான் கொடுக்கும் என்பது எனது கருத்து...

இதுபோன்ற பிரிவினை வாதங்களையும், அவற்றை முன்மொழிவோரையும் ஆரம்பத்திலேயே புறக்கணிப்பது தமிழகத்துக்கு நல்லது!

பார்ப்போம் என்ன தான் நடக்கிறது என்று!

1 comment:

  1. Muttaalgale Tamilagam Indiavil irunthu pirikakudia soolal nilavikondu irukkirathu. Tamilagathai en irandaaga pirikkavendum.

    ReplyDelete

Printfriendly